Skip to main content

குற்றப்பத்திரிகை தாக்கல்; புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் விரைவில் தீர்ப்பு!

Published on 02/05/2024 | Edited on 02/05/2024
Filing of charge sheet; Soon verdict in Puducherry girl  case

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி(வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில், ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுடன் விவேகானந்தன்(59) என்ற இரண்டு பேரும் சேர்ந்து சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரை கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது. மேலும் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியைத் தேடியதும் தெரிய வந்துள்ளது. மேலும் கருணாஸ் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. போக்சோ சட்டத்தின் கீழ் 60 நாட்களுக்குள் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்து நாளையோடு அறுபதாவது நாளை தொட இருக்கிறது. இந்நிலையில் தற்போது போலீசார் 500 பக்கம் கொண்டு குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷோபனா தேவி முன்னிலையில் தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் விரைவில் புதுச்சேரி சிறுமி வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்