Skip to main content

"எனக்கு சிஎஸ்கே டீமை பிடிக்காது"...சர்ச்சையில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்! 

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரீசாந்த். கடந்த 2013ல் நடந்த ஐபிஎல் போட்டியில் மேட்ச் பிக்சிங்கால் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டார். இந்நிலையில் இவர் மீதான தடையை நீக்கும் படி பி.சி.சி.ஐ.க்கு கோர்ட் பரிந்துரை செய்தது. இதனையடுத்து  கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதனால் மீண்டும் இந்திய அணியில் விளையாடுவேன் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் ஸ்ரீசாந்த் சர்ச்சை கருது ஒன்றை தெரிவித்துள்ளார்.  அதாவது,  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த பேடி அப்டன் சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் ஐபிஎல் மேட்சில் டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் அணியில் ஸ்ரீசாந்த் விளையாடினார். அப்போது நடைபெற்ற சிஎஸ்கே போட்டியின் போது ஸ்ரீசாந்த் அந்த போட்டியில் விளையாடவில்லை. அதற்கு கேப்டன் டிராவிட்டையும் என்னையும் ஸ்ரீசாந்த் திட்டினார் என்று குறிப்பிட்டு இருந்தார்.
 

sreeshanth



அதற்கு ஸ்ரீசாந்த் மேட்ச் பிக்சிங் செய்யும் நோக்கத்தில் தான் அந்த போட்டியில் விளையாடாமல் இப்படி செய்தார் என்று  பேடி அப்டன் தெரிவித்து இருந்தார். இது குறித்து பேட்டியின் போது பேசிய ஸ்ரீசாந்த் மறுத்துள்ளார். மேலும் எனக்கு சி.எஸ்.கே அணியை பிடிக்காது. அதனால் தான் அந்த அணிக்கு எதிராக களமிறங்க நான் ஒரு உத்வேகத்துடன் இருந்தேன். சி.எஸ்.கே அணியை எனக்கு பிடிக்காமல் போனதற்கு அந்த அணியின் கேப்டன் தோனி தான் காரணம் என்று நினைக்கலாம் அல்லது அந்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் தான் காரணம் என்று கூட நினைக்கலாம். அது உண்மை இல்லை. எனக்கு சிஎஸ்கே அணியின் டிரஸ் மஞ்சள் நிறத்தில் இருப்பதால் பிடிக்காது என்று சர்ச்சை கருத்தை தெரிவித்தார். அதே போல் தான் எனக்கு ஆஸ்திரேலிய அணியின் டிரஸ்ஸும் மஞ்சள் நிறத்தில் இருப்பதால் பிடிக்காமல் போனது என்றும் கூறியுள்ளார். கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கூறிய இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்