Published on 08/01/2022 | Edited on 08/01/2022
![corona](http://image.nakkheeran.in/cdn/farfuture/ziJk2bBDdoPjd6AyDVZ7SqDpYzTl1d6X8ow43_OL6Pg/1641615263/sites/default/files/inline-images/DADFREFE.jpg)
இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு, மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 986 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 100 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 285 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் கரோனா பாதிப்பிலிருந்து 40, 895 பேர் மீண்டுள்ளனர். அதேபோல் நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3071 ஆக உயர்ந்துள்ளது.
இந்த 3071 பேரில் 1203 குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.