Skip to main content

இந்தியா வருகிறார் புதின்!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

putin

 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியா - ரஷ்யா ஆண்டு மாநாட்டிற்காக அடுத்த மாதம் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதை தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

டிசம்பர் 6 ஆம் தேதி,  இந்தியா - ரஷ்யா ஆண்டு மாநாட்டிற்காக புதின் இந்தியா வரவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த இந்தியா - ரஷ்யா ஆண்டு மாநாட்டில், பிரதமர் மோடியும், புதினும் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு மூலோபாய கூட்டாண்மை உறவுகளை மேலும் மேம்படுத்துவது பற்றி விவாதிக்கவுள்ளனர். மேலும் ஜி20, பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்குள் ஆகியவற்றுக்குள் கூட்டு சேர்ந்து செயல்படுவது குறித்து தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவுள்ளனர்.

 

அதேபோல், இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் கூட்டாக ரஷ்ய பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், இந்த சந்திப்பு டிசம்பர் ஆறாம் தேதி நடக்கவுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்