Skip to main content

கரோனா பாதிப்பு... ஐரோப்பிய நாடுகளை முந்தும் இந்தியா...

Published on 01/06/2020 | Edited on 01/06/2020

 

india jumps to seventh spot in countries most affected by corona


கரோனா பாதிப்பில் ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை விட கடுமையான பாதிப்புகளை இந்தியா சந்தித்துள்ளது. 
 


இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,82,143- லிருந்து 1,90,535 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,164- லிருந்து 5,394 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 86,984- லிருந்து 91,819 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதித்த 93,322 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பாதிப்பு எண்ணிக்கையைப் பொருத்தவரை அதிகமாகப் பாதிக்கப்பட்டதாகக் கருதப்பட்ட ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளின் பாதிப்பு எண்ணிக்கையை விஞ்சியுள்ளது இந்தியா. தற்போதைய நிலையில், கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது இந்தியா. அதேபோல ஆசியாவில் ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தச் சூழலில், ஊரடங்கும் தளர்த்தப்பட்டுள்ளதால், கரோனா பாதிப்பு மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்