Skip to main content

"இன்றைய தினம் மதச்சார்பின்மை தோல்வியடைந்துள்ளது" - ஒவைஸி கண்டனம்...

Published on 05/08/2020 | Edited on 05/08/2020

 

owasi about modis participation in ram mandhir pooja

 

இன்றைய ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் கலந்துகொண்டது, மதச்சார்பின்மை தோல்வியடைந்துள்ளதைக் காட்டுவதாக ஒவைஸி கூறியுள்ளார்.

 

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. இதில் உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை தலைவர் கோபால் தாஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நபர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில், பிரதமர் இந்த விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என ஆரம்பம் முதலே வலியுறுத்திவந்த ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி, இன்று விழாவில் பிரதமர் கலந்துகொண்டதைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

இதுகுறித்து பேசியுள்ள அவர், "இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டியதன் மூலம் தனது பதவியேற்பு உறுதி மொழியை மீறியுள்ளார் பிரதமர். இன்றைய தினம் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை தோல்வியடைந்த நாள். இந்துத்துவாவின் வெற்றி தினம்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்லாமிய இட ஒதுக்கீடு குறித்து பேசிய அமித்ஷா; ஒவைசி கடும் எதிர்ப்பு

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

Owaisi strongly condemned Amit Shah who spoke about Islamic reservation

 

இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அமித்ஷா பேசியதற்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார். 

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தெலுங்கானா சென்ற போது, அங்கு நடந்த கட்சி கூட்டத்தில், “தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் அரசு, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் கொள்கைகளை நிறைவேற்றி வருகிறது. காரின் கைப்பிடி ஒவைசியிடம் இருக்கும்போது அது எப்படி சரியான திசையை நோக்கி செல்லும். சந்திரசேகர் ராவின் ஊழல் ஆட்சியின் முடிவுக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. சந்திரசேகர் ராவ் பிரதமராக வேண்டும் என்ற கனவில் உள்ளார். 2024 தேர்தலிலும் அந்த இடத்தை மோடியே வைத்து இருப்பார்.

 

முதலில் அவர் இந்த ஆண்டு தெலுங்கானாவில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய இருக்கையை தக்கவைப்பதில் கவனம் செலுத்தட்டும். ஒருபோதும் பிரதமர் மோடியை தெலுங்கானா மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது. மத்திய அரசின் திட்டங்கள் ஏழை எளிய மக்களைச் சென்றடையாமல் சந்திரசேகர் ராவின் அரசு தடுத்து வருகிறது. ஆனால், கண்டிப்பாக பாஜக தெலுங்கானாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. பாஜக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு அது இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு பகிர்ந்தளிக்கப்படும்” என்றார். 

 

இது அங்கிருக்கும் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, “தெலுங்கானாவில் இஸ்லாமியர்களுக்கு மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை. அறிக்கையின் அடிப்படையில்தான் கொடுக்கப்படுகிறது. இதனைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் இஸ்லாமிய வெறுப்பு அரசியல் செய்கிறார்கள். பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். சீனாவுடன் எல்லை பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இதைப்பற்றியெல்லாம் விவாதிக்காமல் அமித்ஷா இஸ்லாமியர்கள் சமூகத்திற்கு அச்சுறுத்தல் என்று தெரிவித்து வருகிறார்.” என்று தெரிவித்தார்.

 

 

Next Story

"ஹிஜாப் அணிந்த பெண் பிரதமர் ஆவார்; ஹிஜாப் அணிந்தவரை உங்கள் கட்சியின் தலைவர் ஆக்குங்கள்..." - ஓவைசி பாஜக மோதல்

Published on 26/10/2022 | Edited on 26/10/2022

 

jkl

 

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் பிரதான கட்சிகளான காங்கிரஸ், பாஜக, மஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. இந்நிலையில் முதல்முறையாக மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாருதீன் ஓவைசி தங்கள் கட்சி வேட்பாளர்களைக் கர்நாடக தேர்தலில் போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளைத் துவங்கியுள்ள அவர், கட்சி கூட்டங்களை நடத்தி வருகிறார்.

 

இதன் ஒரு பகுதியாக கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட அவர், " நாட்டில் எப்படியாவது மதச்சார்பின்மையை ஒழிக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. அதற்கான நடவடிக்கைகளை தற்போது எடுக்கத் துவங்கி விட்டனர். நாட்டில் சம வாய்ப்பு என்பது யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கருதுகிறது. அதன் வெளிப்பாடே கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்குச் செல்வது அவர்களது விருப்பம் என்று நீதிபதி ஒருவர் தீர்ப்பு வழங்கியுள்ளார். இது வரவேற்க வேண்டிய தீர்ப்பு. 

 

ஹலால் இறைச்சி, முஸ்லீம் தொப்பிகள், தாடி என அனைத்திலும் தங்களுக்கு ஆபத்து இருப்பதாக பாஜக நினைக்கிறது. இந்தியாவில் வரும் காலத்தில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் பிரதமராவார்" என்றார். இவரின் கருத்துக்குப் பதிலளித்துள்ள பாஜக, "முதலில் ஹிஜாப் அணிந்த பெண் எப்போது மஜ்லிஸ் கட்சியின் தலைவராவார் என்று சொல்லுங்கள்" என பதிலடி தந்துள்ளனர்.