இந்திய மீனவர்கள் 5 பேரை நைஜீரிய நாட்டு கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். அவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஆப்ரிக்க நாடான நைஜீரிய கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் இந்திய மீனவர்களையும் , MT APECUS ( IMO 733810) அவர்களின் மீன்ப்பிடி கப்பலையும் பிடித்துச் சென்றனர். இது தொடர்பாக கடத்தப்பட்ட மீனவர் சுதீப் குமார் சவுத்ரி என்பவரின் மனைவி பாக்யஸ்ரீ தாஸ் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் ட்விட்டர் வாயிலாக முறையிட்டார்.
இதனை ஏற்ற சுஷ்மா சுவராஜ் நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புக் கொண்டு மீனவர்கள் கடத்தப்பட்டதை உறுதிச்செய்தார். இருப்பினும் தனது நேரடி பார்வையில் இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் நைஜீரிய நாட்டு அரசின் உதவியுடன் இந்திய மீனவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்திய வெளியறவுத் துறை இது போன்ற பல மீனவர்களை கொள்ளையர்களிடம் இருந்து மீட்டுள்ளது . இதனால் இந்த மீனவர்களை இந்திய வெளியுறவு துறை விரைவில் மீட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.