மத்திய பணியாளர் நலத்துறை, பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவரும் குழந்தை பராமரிப்பு விடுமுறை இனி தனியாக வசிக்கும் ஆண் ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என விதிகளில் திருத்தம் செய்தது. இந்த விதிகள் ராணுவத்தில் பணிபுரியும் ஆண்களுக்கும் பொருந்தும் என ராணுவ அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
அதன்படி 40 சதவிகிதம் வரை மாற்றுத்திறனுடன், 22 வயது வரை உள்ள குழந்தைகளை பராமரிக்க பெண்களுக்கு 15 நாட்கள் வரை விடுப்பு வழங்கப்பட்டது. இனி, வயது வரம்பில்லாமல் 40 சதவிகிதம் வரை மாற்றுத்திறனுடன் கொண்ட குழந்தைகளை பராமரிக்க பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி தனியாக வசிக்கும் ஆண் ஊழியர்களுக்கும் 5 நாட்கள் விடுப்பு வழங்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த உத்தரவு மனைவியை இழந்த அல்லது விவகாரத்து பெற்ற, குழந்தையை தனியாக வளர்க்கும், பாதுகாப்புத்துறையை சேர்ந்த அனைத்து ஆண் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளார் .