Skip to main content

இந்தியாவில் கரோனாவுக்கு 199 பேர் பலி!

Published on 10/04/2020 | Edited on 10/04/2020


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன. 
 

india coronavirus case 6412 union health and family welfare


இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,865 லிருந்து 6,412 ஆக உயர்ந்துள்ளது. இதில் 199 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நாடு முழுவதும் சுமார் 504 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,364, தமிழகத்தில் 834, டெல்லியில் 720, ராஜஸ்தானில் 463, தெலங்கானாவில் 442, கேரளாவில் 357, ஆந்திராவில் 348, கர்நாடகாவில் 181 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சாலையோர வியாபாரி மீது பாய்ந்த 'பாரதிய நியாய சன்ஹிதா'- அமலுக்கு வந்தது புதிய குற்றவியல் சட்டங்கள்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
 'Bharatiya Nyaya Sanhita' on Roadside Vendor - New Criminal Laws Come Into Force

புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதியான (01/07/2024) இன்று நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி கம்லா மார்க்கெட் பகுதியில் சாலையோர கடை நடத்தி வந்த ஒருவர் பாதசாரிகளுக்கு இடையூறாக நடந்து கொண்டதாக 'பாரதிய நியாய சன்ஹிதா' எனும் புதிய குற்றவியல் சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எழுதி இருந்த கடிதத்தில் 'மத்திய அரசின் மூன்று சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க தங்களுக்கு (மாநிலங்களுக்கு) அவகாசம் தரப்படவில்லை. இந்த மூன்று சட்டங்களுக்கும் எந்த ஆலோசனையும் இல்லாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு சில சிக்கல்கள் உள்ளது.

எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு இல்லாமலேயே புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என சட்டங்களின் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன. சட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம். சட்டங்களில் சில அடிப்படை பிழைகள், முரண்பாடுகள் உள்ளது. எனவே புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார். இந்தநிலையில் புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள் இன்று அமலுக்கு வந்ததோடு டெல்லியில் முதல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

'நானும் மைதானத்தில் இருப்பதைப் போல் உணர்ந்தேன்'-நடராஜன் நெகிழ்ச்சி

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
 'I felt like I was on the field too' - Natarajan

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா அணியோடு மோதிய இந்தியா அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. பார்படாசில் நடந்த இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 176 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்களையும், அக்சர் படேல் 47 ரன்களும், ஷிவம் துபே 27 ரன்களும் அடித்தனர். பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியுள்ளது. இந்திய அணியில் ஹர்திக் மூன்று விக்கெட்டுகளையும், பும்பரா, ஹர்ஷித் சிங் தலா இரண்டு விக்கட்டுகளையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

இந்த வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். சென்னை உட்பட பல்வேறு மாநிலங்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் சாலையில் கூடி நின்று பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

2013 ஆம் ஆண்டுக்குப் பின் ஐசிசி தொடரில் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மகேந்திர சிங் தோனி, 'போட்டியில் இதயத்துடிப்பு எகிறிய போதும் வீரர்கள் நம்பிக்கை உடன் செயல்பட்டனர். இதைவிட சிறந்த பிறந்தநாள் பரிசு இருக்க முடியாது என அணி வீரர்களுக்கு நன்றி' என தெரிவித்துள்ளார். கடைசி வரை பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வாகை சூடியுள்ளது. அதேநேரம் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

 'I felt like I was on the field too' - Natarajan

இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, 'ஒவ்வொரு தருணமும் மிக முக்கியமாக இருந்தது. நானும் மைதானத்தில் இருப்பதைப் போல் உணர்ந்தேன். டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது' என தெரிவித்துள்ளார்.