Skip to main content

அமைதிக்கான ஐந்தம்ச திட்டம்... இந்தியா, சீனா ஒப்புதல்...

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

india china agrees to 5 point plan for resolving border issue

 

 

எல்லைப்பிரச்சனைக்கு அமைதியான வழியில் தீர்வு காணும் வகையில் ஐந்தம்ச திட்டம் ஒன்றிற்கு இந்தியா மற்றும் சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

கடந்த ஜூன் 15-ம் தேதி கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன, இந்திய ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததால் ஏற்பட்ட இந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதேபோல சீன தரப்பில் 40 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த மோதலை தொடர்ந்து இருநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து எல்லைப்பகுதியில் அமைதி திரும்பியது.

 

இந்நிலையில் கடந்த 29 மற்றும் 30-ம் தேதிகளில் பாங்காங் ஏரிப் பகுதியின் தென்முனையில் ஏற்கனவே இருக்கும் பகுதியைத் தன்னிச்சையாக மாற்றும் நடவடிக்கையில் சீன ராணுவத்தினர் முயன்றபோது, இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி பதிலடி கொடுத்தனர். அமைதி பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் எல்லைப்பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழலே நீடித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ரிக்’ அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடந்தது. ரஷ்யா தாய்மையை நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் சந்தித்து பேசினர்.

 

இந்த பேச்சுவார்த்தையில்,  எல்லைப்பிரச்சனையை தீர்க்க ஐந்து அம்ச திட்டத்திற்கு இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புதல் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள், மரபுகளைப் பின்பற்றி எல்லைப் பிரச்சனையைத் தீர்க்க இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்