![Incident happened to 3 people were when the water tank fell](http://image.nakkheeran.in/cdn/farfuture/pxr03lCC2I7fUoa9i8mrQg4VlJEkDPvHhS_IAz93V5A/1729776697/sites/default/files/inline-images/tanks.jpg)
மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில், போசாரி பகுதியில் தொழிலாளர்கள் முகாம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் ஏராளமான தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த முகாமில் வைக்கப்பட்டிருந்த தற்காலிக தண்ணீர் தொட்டி ஒன்று இன்று காலை இடிந்து விழுந்தது. இதில், தண்ணீர் தொட்டியின் கீழ் குளித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது தொட்டி விழுந்ததால் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.