Skip to main content

பணியை ராஜினாமா செய்த மற்றொரு ஐ.ஏ.எஸ் அதிகாரி... சர்ச்சையை ஏற்படுத்தும் அடுத்தடுத்த பதவி விலகல்கள்...

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

ias officer sasikantha senthil resigns

 

 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட  விவகாரத்தில் அரசின் நடவடிக்கையில் அதிருப்தியடைந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் கடந்த 21 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தற்போது கர்நாடகாவில் பணியாற்றும் தமிழகத்தை சேர்ந்த சசிகாந்த் செந்தில் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில். இவர் தற்போது கர்நாடகாவின் தட்சிணா கன்னட மாவட்டத்தில் துணை ஆணையராக உள்ளார். இந்நிலையில் தற்போது அவர் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். ஜனநாயகம் சமரசத்திற்கு உள்ளாக்கப்படுகிறது எனக் கூறி அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், “ பன்முகத் தன்மை கொண்ட ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பு முறையில்லாமல் சமரசத்திற்கு உள்ளாக்கப்படும்போது அதில் சிவில் சர்வீஸ் ஊழியராக தொடர்வது நியாயமற்றது என கூறியுள்ளார். ஏற்கனவே ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி பதவி விலகிய நிலையில் தற்போது இன்னொருவர் பதவி விலகியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்