Skip to main content
Breaking News
Breaking

மெசேஜ் மட்டுமில்லை... பணமும் பகிரலாம்! வாட்ஸ்அப் வெளியிட்ட அசத்தல் அப்டேட்!

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

WhatsApp

 

 

வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 

வாட்ஸ்அப் செயலியானது உலக அளவில் பிரபலமான தகவல் பரிமாற்ற செயலியாகும். செய்திகளைப்  பரிமாறுவதில் உள்ள வேகமும், அதன் துல்லியத்தன்மையும் இதன் பயன்பாட்டை அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றியிருக்கிறது. பயனாளர்களின் பயன்பாட்டை எளிமைப்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனமும் தொடர்ந்து பல்வேறு வகையிலான அப்டேட்ஸை வெளிட்டு வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப் வாயிலாக பணப்பரிமாற்றம் செய்யும் வகையில் புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

 

கூகுள் பே, ஃபோன் பே வாயிலாக UPI முறை மூலம் பணம் அனுப்புவதில் உள்ள அனைத்து விதிகளும், வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பும் போதும் பொருந்தும்.

 

இந்த அப்டேட் குறித்து ஃபேஸ்புக் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி மார்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சியில் பங்கு வகிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்