Published on 15/09/2018 | Edited on 15/09/2018
ஹிந்தி தினத்தையொட்டி நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட துணை குடியரசுத் தலைவர்,” இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் ஹிந்தி மொழிதான் பேசுகிறார்கள். பிராந்திய மொழிகளில் பல புகழ்மிக்க இலக்கியங்கள் உள்ளன, அவற்றையெல்லாம் ஹிந்தி மொழியில் மொழிபெயர்க்க வேண்டும், ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற ஆங்கில மொழி ஒரு நோய். சமூகம், அரசியல் மற்றும் மொழி ஆகியவற்றின் ஒற்றுமையை குறிக்கும் சின்னம் ஹிந்தி மொழி” என்று அவ்விழாவில் தெரிவித்துள்ளார்.