பஞ்சாப் மாநிலத்தில் விவசாய நிலத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா பகுதியில் இருந்து புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர் வானில் பறந்துகொண்டிருக்கும் போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி ஹெலிகாப்டர் ஓட்டும் பைலட்டு தெரிய வந்ததை அடுத்து அவர் என்ன செய்வது என்று யோசித்துள்ளார். அந்த ஹெலிகாப்டரில் 5க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் வேறு அமர்ந்திருந்தார்கள்.
இந்நிலையில் ஹெலிகாப்டரை உடனடியாக தரையிறக்காவிட்டால் மிக பெரிய அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் உடனடியாக அருகில் இருந்த வயல்வெளியில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. அதில் பயணித்த அதிகாரிகள் அனைவரும் எந்த பாதிப்பும் இன்ற தற்போது நலமுடன் இருக்கிறார்கள். ஹெலிகாப்டர் வயல்வெளியில் இறங்கியதை அருகில் உள்ள கிராமத்தினர் ஆர்வமாக வந்து பார்த்து செல்கிறார்கள்.