ஓடும் வாகனத்தில் ஓட்டுனரான தந்தை மாரடைப்பால் உயிரிழக்க வாகனம் விபத்தில் சிக்காமல் இருக்க கூடவே பயணித்த 8 வயது மகன் வாகனத்தை இயக்கி நிறுத்தி விபத்தை தடுத்த சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் தும்கூர் அடுத்த ஹூலியர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். 35 வயதான இவர் குட்டியானை டிரைவராக உள்ளார். இந்நிலையில் தனது 8 வயது மகன் சோயப் உடன் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது நடுசாலையில் சிவக்குமாருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு ட்ரைவர் சீட்டிலேயே இறந்துவிட்டார். அந்த நேரத்தில் பதறிய சிறுவன் சோயப் வாகனத்தின் ஸ்டியரிங்கை பிடித்து இயக்கி வாகனத்தை நிறுத்த முற்பட்டுள்ளான்.

ஒருகட்டத்தில் கியர் மாற்றாததால் வாகனம் எந்த விபத்திற்கு ஆளாகாமல் சாலையில் நின்றது.
அதனை அடுத்து அக்கம்பக்கத்தில் இருந்து வந்தவர்கள் அந்த சிறுவனை மீட்டனர். தந்தை ட்ரைவர் சீட்டில் இறந்து கிடக்க அவரது சடலத்திற்கு அருகில் அந்த சிறுவன் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.