Published on 16/10/2020 | Edited on 16/10/2020
![gulamnabi azad tests positive for corona](http://image.nakkheeran.in/cdn/farfuture/08VCDnEce-KMfqon-FcksAR4IoiJWbW6Q7iiu1QsrVI/1602844871/sites/default/files/inline-images/fbhfgh.jpg)
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்துக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களான தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்துக்கு கரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில தினங்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அரசு விதிமுறைகளைப் பின்பற்றி சோதனை செய்துகொள்ளவும்" எனத் தெரிவித்துள்ளார்.