Skip to main content

கரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் தீ; 8 பேர் உயிரிழப்பு!!

Published on 06/08/2020 | Edited on 06/08/2020
Corona treatment hospital fire

 

 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ‘ஷ்ரே’  என்ற மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

 

அகமதாபாத், நவ்ரங்கபுராவில் உள்ள அந்த மருத்துவமனையில் பற்றி எரியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர பணியில் தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். இந்த தீ விபத்து சம்பவத்திற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகள், நடவடிக்கைகள் குறித்து விசாரித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிர் இழந்த குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் வயிற்றிலிருந்து 5 கிலோ சினைப்பைக் கட்டி அகற்றம்; அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Removal of 5 kg sphincter tumor from female stomach; Achievement of Government Medical College Doctors

பெண்ணின் வயிற்றில் இருந்த 5 கிலோ சினைப்பைக் கட்டியை அகற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, மயிலாடுதுறை மாவட்டம் அளக்குடி கிராம பகுதியைச் சேர்ந்த வீரமணி மனைவி சசிகலா(38) வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து போது அவரது கருப்பையில் 22 செ.மீ நீள அகலத்தில் 5.1 கிலோ சினைப்பைக் கட்டி இருப்பது தெரிய வந்தது.

பின்னர் இது குறித்து அறுவை சிகிச்சைக்கான அனைத்து விதமான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்தப் பெண்ணிற்கு மருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவர் வானதி தலைமையிலான மருத்துவ குழுவினர் திங்கள்கிழமை முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் பணம் செலவு இல்லாமல் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே 2 முறை வயிற்றில் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் மிகவும் சிக்கலான முறையில் 1 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கருப்பையில் இருந்த 5.1 கிலோ சினைப்பைக் கட்டியை  அகற்றி உள்ளார்கள். இதைத் தனியார் மருத்துவமனையில் செய்து இருந்தால் பல லட்சம் ரூபாய் செலவாகி இருக்கும். ஆனால் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பெண்ணிற்கு எந்த செலவும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். இதற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருப்பதி, கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேசன் உள்ளிட்ட சக மருத்துவர்கள், மருத்துவ குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை செய்து கொண்ட சசிகலா மற்றும் அவரது கணவர் கூலித்தொழிலாளி, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

கடலில் சிக்கும் போதைப்பொருட்கள்; மீண்டும் மீண்டும் குஜராத்தில் பரபரப்பு 

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
narcotics at sea; Repeated agitation in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்தின் அகமதாபாத்தில், நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக 7 பேர் கைதாகியுள்ளனர். நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நேற்று குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே 602 கோடி ரூபாய் மதிப்புள்ள 86 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இதுவரை 14 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் குஜராத் கடல் பகுதியில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய கடலோர காவல் படை மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து அந்தப் பகுதியில் சோதனை நடத்தியதில் 173 கிலோ போதைப் பொருள் சிக்கியது. இந்திய மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு பேரை இது தொடர்பாக கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி தொடர்ச்சியாக குஜராத்தில் அதிகப்படியான போதைப் பொருட்கள் பிடிக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.