Published on 01/02/2019 | Edited on 01/02/2019

2019-20-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் இன்று காலை தாக்கல் செய்தார். அதில் கிராஜுவிட்டி எனும் பணிக்கொடை பற்றி பேசினார். “தொழிலாளர் ஒருவர் நிறுவனத்தை விட்டுச் செல்லும்போது, அந்நிறுவனம் பணிக்கொடையாக தரும் ரூ. 10 இலட்சத்தில் இருந்து தற்போது ரூ. 30 இலட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது அடுத்த நிதியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். ஆனால், பணிக்கொடை பெற ஒரு ஊழியர், அந்நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும்மேல் பணியாற்றி இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.