Skip to main content

தங்கக் கடத்தல் வழக்கு - பிரதமருக்கு கடிதம் எழுதிய ஸ்வப்னா சுரேஷ்! 

Published on 21/06/2022 | Edited on 21/06/2022

 

Gold smuggling case: Swapna Suresh writes letter to PM

 

கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

 

தங்கக் கடத்தல் வழக்கில் அதிகாரம் பலம் கொண்டோர், சம்மந்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இதுவரை விசாரிக்கப்படவில்லை என்று கடிதத்தில் ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கில் தான் பலிக்கடா ஆக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

இந்த வழக்கு குறித்து நேரில் சந்தித்து விரிவாக விளக்க வேண்டும் என்றும், இதற்காக அனுமதி தர வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், தங்கக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார். 

 

தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ், இதில் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பிருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கேரளா தங்கக் கடத்தல் வழக்கு; ஸ்வப்னா சுரேஷ் உள்பட 44 பேருக்கு அபராதம்!

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Kerala gold theft case; 44 people including Swapna Suresh fined!

 

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி துபாயிலிருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சுமார் 15 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பார்சல் மூலம் கடத்தி வரப்பட்டது. ஒரு நாட்டின் தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

 

இது தொடர்பான வழக்கில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அப்போதைய ஐக்கிய அமீரக தூதரகத் துணைச் செயலாளர் ஸ்வப்னா சுரேஷ், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன், தூதரக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சரித்குமார் உள்பட 44 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. 

 

இந்த வழக்கு தொடர்பாக, தேசியப் புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட 3 தரப்பும் விசாரணை நடத்தி வருகிறது. இதில் ஸ்வப்னா சுரேஷ், சிவசங்கர் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் ஜாமீனில் இருக்கின்றனர். மேலும், இது தொடர்பான வழக்கு தற்போது எர்ணாகுளம் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

 

இந்த நிலையில், தங்கக் கடத்தல் குறித்து விசாரித்த மத்திய சுங்கத்துறை, இந்த கடத்தலில் நேரடியாக ஈடுபட்டதாக ஸ்வப்னா சுரேஷ், சரித்குமார், சந்தீப் நாயர், ரமீஸ் ஆகியோருக்கு தலா ரூ. 6 கோடி வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கருக்கு ரூ. 50 லட்சம் என இந்தக் கடத்தலில் ஈடுபட்ட 44 பேருக்கும் மொத்தம் 66.65 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என மத்திய சுங்கத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

 

Next Story

விமானத்தில் தங்கம் கடத்தல்; சிக்கிய சுங்கத்துறை அதிகாரிகள்

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

Gold in flight; Trapped customs officials

 

தங்கம் கடத்த உடந்தையாக இருந்த இரண்டு விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

கடந்த 4 ஆம் தேதி அபுதாபியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வந்த விமானத்தில் 4.8 கிலோ தங்கம் கடத்தப்பட்டது. இதனை மடக்கிப் பிடித்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள், கடத்தி வந்தவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், கைதானவர்கள் விமான நிலையத்தில் இருக்கும் சுங்கத்துறை அதிகாரிகளின் உதவியுடன் தான் தங்கம் கடத்தி வந்ததாகத் தெரிவித்தனர். 

 

இதனையடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய சுங்கத்துறை இயக்குநரக அதிகாரிகள், கடத்தல் கும்பலுக்கு தொடர்புடைய முகம்மது(39), நிதின்(48) ஆகிய இரண்டு அதிகாரிகளை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இவர்கள் இருவரும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சுங்கத்துறையில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் உதவியுடன் 80 கிலோ தங்கம் கடத்தப்பட்டு இருந்ததையும் உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்துள்ளனர்.