Skip to main content

வாக்குப்பதிவு நாளில் நான்கு பேர் சுட்டுக்கொலை - மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

west bengal

 

மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலையில், நான்காவது கட்ட தேர்தல் இன்று (10.04.2021) நடைபெற்று வருகிறது.

 

இந்தநிலையில், மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் மாவட்டம் மாதபங்காவில், வன்முறை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் முதல்முறை வாக்காளர் உட்பட நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மத்திய பாதுகாப்பு படைவீரர்கள்தான், நால்வரையும் சுட்டுக்கொன்றதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

 

இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி மேற்கு வங்க சிறப்பு தேர்தல் பார்வையாளருக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் தினத்தன்று நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மம்தா பானர்ஜி, மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் பாஜகவிற்கு ஆதரவாக இருப்பதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்