Skip to main content

விவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தம்!!!

Published on 02/10/2018 | Edited on 02/10/2018

 

formers rally

 



கடன் தள்ளுபடி, விவசாய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வைத்து டெல்லிக்கு பேரணியாக சென்ற வடமாநில விவசாயிகளை காசிபாத் அருகே தடுப்புகள், கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் தண்ணீர் பீய்ச்சி கலைக்க முயற்சித்து வருகிறது காவல்துறை. அசம்பாவிதங்களைத் தடுக்க ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் ட்ராக்டர் உள்ளிட்ட ஏராளமான வாகனங்களில் வந்தனர்.

 

பாரதிய கிஷான் சங்கம் செப்டம்பர் 23 அன்று உத்ரகாண்ட்  ஹரிதுவாரிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கியது,“கிஷான் க்ராண்ட்டி பட்யாத்ரா”. உத்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களின் வழியே இன்று டெல்லியை ராஜ்கோட் வந்தது. 


நேற்று முதலே அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. அக்டோபர் 08 வரை அது அமலில் இருக்கும் என்பதும் அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் ஆகியோர் இந்தப் போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதும்,  டெல்லிக்குள் அவர்களை விடுங்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்