Published on 13/06/2022 | Edited on 13/06/2022

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனங்களுக்கான விற்பனை அதிகரித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூபாய் 5 முதல் ரூபாய் 6 வரை செலவாகும் நிலையில், இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனத்திற்கு ரூபாய் 2 மட்டுமே செலவு பிடிப்பது தெரிய வந்துள்ளது. இதனால் சிஎன்ஜி எனப்படும், இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனத்திற்கு தேவை அதிகரித்துள்ளது.
முன்னணி கார் விற்பனை நிறுவனங்களில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 1,400 விற்பனையகங்கள் இருந்த நிலையில், தற்போது 3,700 ஆக அது அதிகரித்துள்ளது. இதனால் இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனங்களின் விற்பனை விரைவில் புதிய மைல்கல்லை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.