Published on 27/09/2018 | Edited on 27/09/2018

உணவு விநியோகம் செய்யும் ஃபுட்பாண்டா (Foodpanda) இதுவரை இந்தியாவில் ஏழு நகரங்களில் இருந்தது. இன்று அந்நிறுவனம் புதிதாக பதிமூன்று நகரங்களில் தன் சேவையை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது. புதிதாக கால் பதிக்கும் பதிமூன்று நகரங்களில் இதுவரை ஐந்தாயிரம் விநியோக பங்குதாரர்களிடம் ஏற்கனவே பேசிச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அதேசமயம் அறுபதாயிரம் நபர்களை தன் நிறுவனத்தின் பொருள்களை விநியோகம் செய்வதற்காக புதிதாக வேலைக்கு சேர்க்கப்போவதாக கடந்த மாதம் அறிவித்துள்ளது.சில மாதங்களுக்கு முன்னாள் ஓலாவுடன் இணைந்தபிறகு ஃபுட்பாண்டாவின் இந்த விரிவாக்கம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.