முத்தலாக் மசோத பாராளுமன்றத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டாததற்கு ராகுலும், காங்கிரசுமே கரணம் என மத்திய மந்திரி ஆனந்த் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
முத்தலாக் எனப்படும் விகாரத்து முறைக்கு எதிரான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் அந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. முத்தலாக் மசோதா ஆண்களுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வந்தன. இதன் காரணமாக மூன்று திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்று மாநிலங்கவையில் நிறைவேற்றப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
முத்தலாக்கில் சம்பந்தப்பட்ட ஆணுக்கு முன்ஜாமீன் கிடையாது என்ற அம்சம் மாற்றப்பட்டு மனைவியிடம் கருத்து கேட்கப்பட்டபின் மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கலாம். அதேபோல் மனைவிக்கு இழப்பீடு தர கணவர் சம்மதித்த பிறகு ஜாமீன் வழங்கலாம்.
முத்தலாக் விவகாரத்தில் பக்கத்து வீட்டார் புகார் கொடுத்தால் கூட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அம்சம் மாற்றப்பட்டு சம்பந்தப்பட்டவரின் ரத்த சொந்தங்கள் மட்டும்தான் புகார் தெரிவிக்க முடியும் எனவும் மாற்றப்பட்டுள்ளது. கணவன்–மனைவி இடையே சமரசம் செய்து வைக்க மாஜிஸ்திரேட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்று மூன்றாவது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மூன்று திருத்தங்களுக்கு பிறகு முத்தலாக் மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்படுவதாக இருந்தது எனவே திருத்தப்பட்ட முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் நேற்று மக்களவையில் திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா நிறைவிவேற்றப்படாத நிலையில் இன்று நாடாளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி ஆனந்தகுமார், பிரதமர் மோடி முஸ்லீம் பெண்களின் நலன் மீது அக்கறை கொண்டவர் அதனால்தான் இறுதி நிமிடம் வரை மசோதவை நிறைவேற்ற முயற்சி செய்தோம். ஆனால் காங்கிரஸ் கட்சியும் ராகுலும் தடுத்துவிட்டனர் என குற்றம்சாட்டினார்.