Published on 20/09/2019 | Edited on 20/09/2019
காஷ்மீரில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் சிறப்பு அந்தஸ்த்து பறிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். பள்ளிகளும் கல்லூரிகளும் மூடிக் கிடக்கின்றன. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், உண்மை நிலையை அறிய முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். தகவல் தொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், காஷ்மீரில் சுமுகநிலை திரும்ப இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு நடத்த வேண்டும் என்றும், இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஐ.நா. உதவும் என்றும் பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்டெரெஸ் கூறியுள்ளார். முக்கியமாக காஷ்மீரில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.