Skip to main content

சுதந்திரம் அடைந்த பின் கட்டப்பட்ட முதல் மருத்துவக் கல்லூரி; பிரதமர் பெருமிதம்

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

First medical college built after independence; The Prime Minister is proud

 

பிரதமர் நரேந்திர மோடி இன்று தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டையூ டாமன் ஆகிய பகுதிகளில் ரூ.4800 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார். மேலும் சில்வாசா நகரில் உள்ள ரூ.203 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நமோ மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை திறந்து வைத்து அதை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

 

மருத்துவக் கல்லூரி தொடக்க விழாவில் பேசிய அவர், “சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்கள் கடந்தும் டாமன், டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கட்டப்படவில்லை... பல தசாப்தங்களாக நாட்டை ஆண்டவர்கள் இங்குள்ள இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றி கவலைப்படவே இல்லை. இந்த சிறிய யூனியன் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதால் தங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.

 

2014 இல் நாங்கள் அர்ப்பணிப்பு மற்றும் சேவையுடன் பணியாற்றத் தொடங்கினோம். இன்று டாமன், டையூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி அதன் முதல் தேசிய கல்வி மருத்துவ அமைப்பு (NAMO) மருத்துவக் கல்லூரியைப் பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சில்வாசாவிற்கு நல்ல உட்கட்டமைப்பு, சாலைகள், பாலங்கள், பள்ளிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக மத்திய அரசு 5500 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளது” எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்