Published on 26/03/2019 | Edited on 26/03/2019
டெல்லியின் நொய்டா பகுதியில் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
நொய்டா பகுதியில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் தெர்மோகோல், அட்டைகள் தயாரிப்பு மற்றும் பர்னிச்சர் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். 300 பணியாளர்கள் வேலை செய்யும் அந்த நிறுவனத்தில் தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 6 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.