பீகாரில் உள்ள முசாபர்பூரைச் சேர்ந்தவர் தில்ஷாத் உசேன். உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்தி வந்த இவர், தனது கடைக்கு எதிரே இருக்கும் வீட்டில் வசித்து வந்த சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து தில்ஷாத் உசேன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பாய்ந்தது. இந்த வழக்கின் விசாரணை, கோரக்பூர் சிவில் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தில்ஷாத் உசேன் பெயிலில் இருந்து வந்தார். இந்தநிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்த தில்ஷாத் உசேனை நீதிமன்ற நுழைவு வாயிலில் வைத்து, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் தந்தை சுட்டுகொன்றுள்ளார்.
நீதிமன்றத்தில் உள்ள டாக்ஸி ஸ்டாண்டில் சிறுமியின் தந்தைக்கும், தில்ஷாத் உசேனுக்கும் இடையே நடந்த சிறு வாக்குவாதத்திற்குப் பிறகு தில்ஷாத் சுடப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். தில்ஷாத் உசேனை சுட்டவர் ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்புப்படை அதிகாரி என்பது குறிப்பிடத்தது.