Skip to main content

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் எப்போது? - தேதிகளை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்!

Published on 08/01/2022 | Edited on 08/01/2022

 

sushil chandra

 

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ள அவர், அம்மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 10 ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

 

உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும், 20 ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலும், 23 ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தலும், 27 ஆம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தலும் நடைபெறும் என அறிவித்துள்ள சுஷில் சந்திரா, மார்ச் 3 ஆம் தேதி ஆறாம் கட்ட தேர்தலும், 7 ஆம் தேதி 7 ஆம் கட்ட தேர்தலும் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

 

பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா ஆகிய மூன்று மாநிலங்களிலும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர்  சுஷில் சந்திரா, மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். அதேபோல் இந்த மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்