Skip to main content

பேருந்தில் சேட்டை செய்த ஓட்டுநருக்கு ஆர்டிஓ கொடுத்த ஷாக் தண்டனை!

Published on 16/11/2019 | Edited on 17/11/2019

கேரளாவின் கல்பெட்டா பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ ஒன்று காண்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அந்த வீடியோவில், வாகனத்தின் முன்பகுதியில் ஓட்டுநர் அமர்ந்திருக்க, அவரை சுற்றி இளம் பெண்கள் சிலர் நின்று கொண்டிருக்கிறார்கள். அப்போது வாகனத்தை ஓடி கொண்டிருக்கும் போதே டிரைவர் இளம் பெண்களை கியர் மாற்ற அனுமதிக்கிறார்.
 

jh



இதனை ஒருவர் வீடியோ எடுக்க அது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து அந்த டிரைவரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். பொறுப்புடன் வாகனத்தை இயக்க வேண்டியவர் எப்படி இவ்வாறு விளையாட்டு தனமாக செயல்படலாம் என பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள். மேலும் சாலையில் செல்வோரின் பாதுகாப்பும் முக்கியம் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள்.  இந்நிலையில் இந்த வீடியோ ஆர்.டி.ஓ பார்வைக்கு செல்ல, அதுகுறித்து விசாரணை மேற்கொண்ட அவர், வாகனத்தை பாதுகாப்பாக இயக்கத் தவறியதாக டிரைவர் ஷாஜியின் ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘வண்டில என்ன கம்ப்ளைண்ட்?, வண்டியே கம்ப்ளைன்ட் தான்!’- அரசு பேருந்து ஓட்டுநரின் புலம்பல் 

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Govt bus driver video goes viral

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே சர்வீஸ் சாலையில் வர வேண்டிய பேருந்து நெடுஞ்சாலையில் சென்றதால் ஆத்திரமடைந்த  பயணி இத்தனை நாளா பஸ் கீழே வந்துச்சு இப்ப ஏன் கீழ வரல வண்டில என்ன கம்பிளைன்ட்? என கேட்க வண்டியே கம்பளைண்ட் தான் என்று ஓட்டுநர் கூறும் விதம் வைரல் ஆகி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம்  நாட்றம்பள்ளி  சென்னை - பெங்களூர் ஆறு வழி தேசிய நெடுஞ்சாலை  பகுதியில் மேம்பாலத்தின் வழியாக பேருந்துகள் செல்வதால், சர்வீஸ் சாலையில் பேருந்துகள் வந்து செல்லாமல் இருந்தது. பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் சுமார் 40 அடி உயரம் மேலே ஏறி சென்று பேருந்தில் பயணம் செய்யும் நிலை இருந்தது. இதனை அறிந்த தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் சமீபத்தில் சர்வீஸ் சாலை அமைத்தது. தொடர்ந்து பல்வேறு அரசு பேருந்துகள் சர்வீஸ் சாலை வழியாக சென்று வந்தது.

Govt bus driver video goes viral

சர்வீஸ் சாலை வழியாக செல்லும்போது பேருந்து கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மேலாக தாமதமாக செல்லக்கூடிய நிலை இருப்பதால் ஓட்டுநர்கள் மேம்பாலத்தின் வழியாகவே பேருந்தை இயக்கி செல்கின்றனர். இதனால் வயதானவர்கள், குழந்தைகள் ஏரி வர சிரமம் ஏற்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பயணி ஒருவர் ஏறி பேருந்து கீழே வராமல் ஏன் மேலே செல்கிறீர்கள்? பேருந்தில் என்ன கம்பளைண்ட் என்று ஓட்டுநரிடம் கேட்டுள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அப்போது ஓட்டுநர் செய்வதறியாமல் திகைத்து, “வண்டியே கம்ப்ளைன்ட் தான் என்கிட்ட கேட்டு என்ன பண்றது. நானே இதை வச்சு ஓட்டிட்டு இருக்கிறேன் போய் அதிகாரிகளை கேளுங்க...” என்று பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

“இதென்ன உங்கப்பன் வீட்டு வண்டியா...” - பெண் பயணியிடம் அரசுப் பேருந்து ஓட்டுநர் அலட்சியம்

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
Government bus driver allegedly responded to woman passenger with indifference

கூடலூரை அடுத்த அய்யன்கொல்லியில் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பேருந்திற்காக நீண்ட நேரமாக நின்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து, பெண் நிறுத்தச் சொல்லி கை காட்டியும் நிறுத்தாமல் சென்றுள்ளது. பின்னர் அதே பேருந்து அய்யன்கொல்லியில் நின்றுகொண்டிருந்தபோது, சம்பந்தப்பட்ட பெண் அந்தப் பேருந்தின் ஓட்டுநரிடம் ஏன் பேருந்தை நிறுத்தவில்லை என்று நியாயம் கேட்டுள்ளார். அதற்கு ஓட்டுநர் அலட்சியமாகப் பதில் கூறுகிறார்.

இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார். மேலும் அந்த வீடியோவில், “4 மணி நேரம் நிக்கிறோம், பஸ்ஸே வரல; கைய காட்டினாலும் நீங்களும் கண்டுக்காம பஸ்ஸ நிறுத்தாம போய்ட்டீங்க...” என்று அந்த பெண் கேட்க, “உன்ன கண்டுக்கிறதுக்கு இது என்ன உங்கப்பன் வீட்டு வண்டியா...” என்று அலட்சியமாக பதில் கூறுகிறார் ஓட்டுநர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூடலூர் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் தெரிவித்துள்ளார்.