Published on 31/01/2022 | Edited on 31/01/2022

2022-2023 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஆற்றிய உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையை தொடங்குவதற்கு முன்னதாக திமுக மற்றும் காங்கிரஸ் எம்.பிக்கள், நீட் விலக்கு மசோதாவைத் தமிழக ஆளுநர், குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்துவதைக் கண்டித்து முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடந்த 29ஆம் தேதி, நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநர் ரவியை கடுமையாகத் தாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.