'தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்' திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம் படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமரானது மற்றும் அவர் பிரதமரான காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை தழுவி 'தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்' என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் அனுபம் கேர் மன்மோகன் சிங்காக நடித்துள்ளார். இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் மன்மோகன் சிங் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாகக் கூறி படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தனிக்கை சான்றிதழ் கொடுக்கப்பட்ட ஒரு படத்திற்கு தடைவிதிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.