இந்தியாவில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மே ஒன்று முதல் மாநிலங்களும், தனியார் மருத்துவமனைகளும் கரோனா தடுப்பூசியை, அதனை தாயரிக்கும் நிறுவனங்களிடம் இருந்தே வாங்கிக்கொள்ளலாம் என அனுமதியளித்த நிலையில், கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனம், மாநிலங்களுக்கு தடுப்பூசி 400 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
ஆனால் தடுப்பூசியின் விலை அதிகமாக இருப்பதாகவும், அதனை குறைக்கவேண்டும் என பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தின. மத்திய அரசு தடுப்பூசி நிறுவனங்களிடம் விலையை குறைக்குமாறு கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் சீரம் நிறுவனம், மாநிலங்களுக்கான கரோனா தடுப்பூசி விலையில் 100 ரூபாயை குறைத்துள்ளது. மாநிலங்களுக்கு 300 ரூபாய்க்கு தடுப்பூசி விற்கப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.