Published on 27/04/2020 | Edited on 27/04/2020

உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தியும் அந்த வைரஸ் அரசுக்கு சவாலாக அமைந்துள்ளது. இந்த நிலையில் வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த சோதனை வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்தது. இதனால் சீனாவிலிருந்து ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை இந்தியா வாங்கியது.
பின்னர் அந்த கருவிகள் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசால் பிரித்து வழங்கப்பட்டது. இந்த கருவிகளை வைத்து சோதனை நடத்தப்பட்டு வந்தநிலையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் ரேபிட் கிட் தவறான முடிவுகளை காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. மேலும் RT-PCR டெஸ்ட் கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.