Published on 12/02/2021 | Edited on 12/02/2021

இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் மூத்த தலைவரான இவரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் 15 ஆம் தேதியோடு முடிவடைகிறது.
இதனையடுத்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு, தங்கள் கட்சியின் இன்னொரு மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை பரிந்துரைத்துள்ளது காங்கிரஸ்.
காங்கிரஸ் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, ஏற்கனவே, 2014 - 2019 ஆம் ஆண்டுகளில் மக்களவை காங்கிரஸ் தலைவராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.