இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு, துறை சார்ந்த அமைச்சர்கள் வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ பதிலளித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில், இந்திய பாதுகாப்பு படையினரின் தற்கொலை குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை 787 இந்திய பாதுகாப்பு படையினர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். இந்திய இராணுவத்தை சேர்ந்த 591 பேரும், கப்பற்படையை சேர்ந்த 36 பேரும். விமானப்படையை சேர்ந்த 160 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் 2014 முதல் தற்போது வரை பாதுகாப்பு படை வீரர்கள், சகவீரர்களை சுட்டு கொல்லும் சம்பவங்கள் 18 முறை நடைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ள அவர், பாதுகாப்பு படை, தங்கள் வீரர்களின் மனநல பிரச்னையை கையாளவும், தற்கொலை மற்றும் சக வீரர்களை சுட்டுக்கொள்ளும் சம்பவத்தை தடுக்கவும் நெறிமுறைகளை வகுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.