Skip to main content

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Published on 18/09/2024 | Edited on 18/09/2024
Central Cabinet approves on One nation one election' project 

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்தக் குழு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில், ஒரே நேரத்தில், மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவதில் சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதில் தேர்தல்களை நடத்தும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் எனவும், அரசியலமைப்பில் திருத்தம் செய்ய மாநில அரசின் அனுமதி தேவை இல்லை எனவும் கூறப்பட்டது. அதே சமயம் இந்த திட்டத்திற்கு 50 சதவீத மாநிலங்களின் சட்ட ஒப்புதல் அவசியம் எனவும் கூறப்பட்டது.  அதோடு ஒரே நாடு ஒரே தேர்தலை வரும் 2029ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Central Cabinet approves on One nation one election' project 

ஒரே நாடு ஒரே தேர்தலை வரும் 2029ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தலாம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் சட்டமன்றங்களின் ஆயுள் காலத்தை படிப்படியாக மாற்றியமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.  ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு உபகரணங்கள், மனிதவளம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு முன்கூட்டியே திட்டமிடுமாறு குழு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தின் உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

மேலும்,  அவர்“ வீனஸ்-வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் (VOM) பணிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது அறிவியல் ஆய்வு மற்றும் வீனஸ் வளிமண்டலம், புவியியல் மற்றும் அதன் அடர்த்தியான வளிமண்டலத்தில் ஆய்வு செய்து பெரிய அளவிலான அறிவியல் தரவுகளை உருவாக்குதல் இதன் முக்கிய நோக்கம் ஆகும்.  சந்திரயான்- 4 திட்டம் மேலும் பல கூறுகளைச் சேர்க்க விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாகச் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்புவது. இதற்கான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. வீனஸ் ஆர்பிட்டர் மிஷன், ககன்யான் ஃபாலோ-ஆன் மற்றும் பாரதிய அந்தரிக்ஷ் நிலையம் மற்றும் அடுத்த தலைமுறை ஏவுதல் வாகன மேம்பாட்டிற்கும் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்