நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வெற்றிகரமாக அந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அதை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் உச்சத்தில் இருந்து வருகின்றது. போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் உத்தரபிரதேசத்தில் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக கூறி, 130 பேருக்கு அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கலவரத்தை ஏற்படுத்தியதற்காக 50 லட்சம் வரை அரசுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பாக கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் கலவரம் ஏற்பட்ட போது பையில் வைத்திருந்த துப்பாக்கிச்சூட்டில் இருந்து தான் வைத்திருந்த பர்ஸ் தன்னை காப்பாற்றியதாக உ.பி போலிஸ் ஒருவர் தெரிவித்துள்ளார். போராட்டகாரர்கள் மீது தடியடி நடத்திய போது அவரின் மீது புல்லட் ஒன்று பாய்ந்ததாகவும், அவர் வைத்திருந்த பர்ஸ் அதனை தடுத்ததாககவும் அவர் தெரிவித்துள்ளார். பர்ஸில் 4 ஏடிஎம் கார்டுகளும், சாய்பாபா போட்டவும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.