பிரதமர் மோடியை தவறாகப் பேசியதாக மாற்றுத்திறனாளி ஒருவரை உத்தரப் பிரதேச பாஜக தலைவர் முகமது மியா தடியால் தாக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
‘உத்தரப் பிரதேசத்தில் உள்ள சம்பால் மாவட்டத்தைச் செர்ந்த பாஜக தலைவர் முகமது மியா அவரது அலுவலகத்திற்கு வெளியே சாலையில் நின்று கொண்டிருந்தபோது, மாற்றுத்திறனாளி ஒருவர் அகிலேஷ் யாதவுக்குதான் நாங்கள் ஒட்டளிக்க இருக்கிறோம் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கோபமடைந்த முகமது மியா அவரை தடியால் வாயில் அடித்து மிரட்டி இருக்கிறார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது’ என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து முகமது மியாவுக்கு கண்டனங்கள் வலுக்கல், முகமது மியா இதுகுறித்து “அந்த நபர் மோடியையும், யோகி ஆதித்யநாத்தையும் விமர்சித்தார். அவர் மது அருந்தி இருந்தார். நான் அவரை அந்த இடத்தில் இருந்து அகற்றவே அவ்வாறு செய்தேன். மேலும் அவரது வாயில் நான் குச்சியை வைக்கவில்லை” என்று விளக்கமளித்துள்ளார்.