ஆந்திர மாநில அமைச்சரவை கடந்த சனிக்கிழமை பதவியேற்றத்தை தொடர்ந்து, இன்று அமைச்சரவை கூட்டத்திற்கு அம்மாநில முதலவர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார். இதில் அனைத்து அமைச்சர்களும் தவறாமல் பங்கேற்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்களும், 5 துணை முதல்வர்களும் இடம் பெற்றுள்ளனர்.
ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் உள்ள ஆந்திர தலைமை செயலகத்தில் இன்று மாலை இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. முதல்வர் தலைமையில் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் கூட்டம் என்பதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், நிதிச்சுமை குறித்தும் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்கிறார். அதனைத் தொடர்ந்து பல திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதலை பெற்று உடனடியாக நடைமுறைப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே முதன்மை மற்றும் முன்னோடி மாநிலமாக 'ஆந்திர பிரதேசம்' மாநிலத்தை மாற்றுவேன் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.