Published on 22/02/2019 | Edited on 22/02/2019

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக தமிழ்நாட்டில் தனது தேர்தல் கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது. அதிமுக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து பாஜக தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்டதை போல பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தற்போது மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார். அங்கிருந்து மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றுக்கு செல்லும் அவர் அங்கு நடைபெறும் பாஜக தென் தமிழக நாடாளுமன்ற தேர்தல் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக கூட்டணியில் தேமுதிக கட்சியையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.