அண்மையில் சர்ச்சைக்குள்ளான SPG பாதுகாப்பு முறையில் புதிய திருத்தங்களை கொண்டுவர உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் SPG பாதுகாப்பை அண்மையில் மத்திய அரசு விலக்கிக்கொண்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்ததுடன், இந்த விவகாரம் சர்ச்சையாகவும் மாறியது. இந்த சூழலில் SPG பாதுகாப்பு குறித்து இன்று மக்களவையில் பேசிய அமித்ஷா, "சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி) சட்டத்தில் புதிய திருத்தத்துடன் நான் இங்கு வந்துள்ளேன். இந்த திருத்தத்திற்குப் பிறகு, இந்தச் சட்டத்தின் கீழ், பிரதமரின் இல்லத்தில் வசிக்கும் பிரதமர் மற்றும் அவருடன் அதிகாரப்பூர்வமாக வசிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும்.அதேபோல முன்னாள் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினர் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட இல்லத்தில் குடியிருந்தால் 5 வருட காலத்திற்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும்" என தெரிவித்தார்.