Skip to main content

ஒரு அங்குல நிலத்தில்கூட கண்வைக்க முடியாது... எந்தவித நடவடிக்கைக்கும் ராணுவம் தயார் -அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி 

Published on 19/06/2020 | Edited on 19/06/2020
all party meeting modi

 

லடாக் எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி மூலமாக அனைத்து கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்றது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பி.எஸ். பங்கேற்றுள்ளார். திமுக சார்பில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரி, பிஜூ ஜனதா தளம் சார்பில் நவீன் பட்நாயக், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மம்தா பானர்ஜி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் ஜெகன்மோகன் ரெட்டி, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவார், சமாஜ்வாதி அகிலேஷ் யாதவ், சிவசேனா கட்சி சார்பில் உத்தவ் தாக்கரே ஆகியோர் இந்த காணொலி ஆலோசனையில் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவுமில்லை ராணுவ நிலைகளை கைப்பற்றவுமில்லை. இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சித்தவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டது. நாட்டின் ஒரு அங்குல நிலத்தின்மீது கூட யாரும் கண் வைக்க முடியாத வகையில் நமது பலம் உள்ளது. ஒரே சமயத்தில் பல முனையங்களுக்கு செல்லக்கூடிய திறன் நாட்டின் ஆயுதப் படைகளுக்கு உள்ளது. நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை நமது ஆயுதப்படைகள் மேற்கொள்ளும். நாட்டின் எல்லைப் பகுதியில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்புகளால் ரோந்து திறன் அதிகரித்துள்ளது. முப்படைகளுக்கு தேவையான ஆயுதம், விமானம், ஏவுகணை தடுப்பு அமைப்பு ஆகியவற்றை வாங்க முக்கியத்துவம் வழங்கப்படும். நாட்டை பாதுகாப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்றார்.

 

சார்ந்த செய்திகள்