Published on 28/09/2022 | Edited on 28/09/2022
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக வெங்கடரமணியை நியமித்து உத்தரவிட்டுள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017- ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1- ஆம் தேதி முதல் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் வரும் செப்டம்பர் 30- ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், வெங்கடரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76 (1) பிரிவின் கீழ் மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக வெங்கடரமணியை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.