Published on 26/07/2022 | Edited on 26/07/2022
4ஜி அலைக்கற்றையை விட 10 மடங்கு கூடுதல் இணைய சேவை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கியது. ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன், அதானியின் அதானி என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. 72 ஜிகாஹெர்ட்ஸ் அளவுள்ள அலைக்கற்றைகள் விற்பனை மூலம் மத்திய அரசுக்கு ரூபாய் 4.30 லட்சம் கோடி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏலத்தில் அதிகளவு அலைக்கற்றைகளை ரிலையன்ஸ் ஜியோ, அதானி ஆகிய இரண்டு நிறுவனங்கள் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி சேவை ஓரிரு மாதங்களில் பெரு நகரங்களில் மட்டும் தொடங்க உள்ளது. இதன் பின் இச்சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்படும். பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள தொலைத்தொடர்பு நிறுவனமான அதானி, தொலைத்தொடர்பு துறையிலும் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.