Skip to main content

10% இட ஒதுக்கீடு செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Published on 07/11/2022 | Edited on 07/11/2022

 

10% reservation will go- Supreme Court verdict!

 

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் இன்று (11/07/2022) தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் நான்கு விதமான தீர்ப்பை அளித்துள்ளனர். 

 

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அப்போது நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, "10% இட ஒதுக்கீடு இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு, அரசியலமைப்பை மீறவில்லை. 50% உச்ச வரம்பை மீறவில்லை. அனைவரும் இலக்குகளை அடையத் தேவையான கருவியாக இட ஒதுக்கீடு பயன்படுகிறது. எனவே, பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியது சரியே" என்றார். 

 

அதேபோல், 10% இட ஒதுக்கீடு வழங்கியது சரியே என்று, நீதிபதிகள் பெலா திரிவேதி, தினேஷ் மகேஸ்வரி, பர்திவாலா ஆகிய மூன்று பேர் தீர்ப்பளித்துள்ளனர். மேலும், 10% இட  ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என நீதிபதிகள் யு.யு.லலித், ரவீந்திர பட் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.  

 

ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நான்கு நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் எனத் தீர்ப்பளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்