புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞர் ஜாகீர் உசேன் உயிரிழந்ததாக வெளிவந்த தகவல்கள் தவறானது என்று அவரது மருமகன் தெரிவித்துள்ளார்.
பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தவர் ஜாகீர் உசேன். இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதும் ஜாகீர் உசேனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2024 பிப்ரவரியில் 3 கிராமிய விருதுகளை பெற்றுள்ளார்.
இதனிடையே இருதயக் கோளாறு காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. இறந்த செய்தியை அறிந்த அனைவரும் கவலைப்பட்டு இரங்கல் செய்தியை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், ஜாகீர் உசேன் மறைந்ததாக வெளிவந்த தகவல் தவறானது என்று ஜாகீர் உசேனின் மருமகன் அமீர் ஆலியா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘நான் ஜாகீர் உசேன் மருமகன், அவர் இறந்துவிடவில்லை. எனது மாமா ஜாகீர் உசேன் உயிருடன் இருக்கிறார். தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களில் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் பிரார்த்தனைகளைக் கேட்கிறோம், அனைவரின் நல்வாழ்த்துக்களையும் கேட்கிறோம். உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அனைவரும் அவரது உடல்நிலைக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ எனப் பதிவிட்டுள்ளார்.