Skip to main content

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி - பலியானோர் விவரம்

Published on 22/05/2018 | Edited on 24/05/2018
STERLITE


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பல்வேறு கிராம மக்கள் ஏராளமானோர் இன்று காலை பேரணியாக சென்றனர். அப்போது பேரணியாக சென்ற பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் தடையை மீறி போராட்டகாரர்கள் தொடர்ந்து சென்றனர். இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து முன்னேறினர். அப்போது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.
 

அதையும் பொருட்படுத்தாத மக்கள் கண்ணீர் புகைக்குண்டு வீசும் வாகனத்தையும், போலீசாரையும் ஓட ஓட விரட்டி அனுப்பினர். இதனால் நிலையை கட்டுக்குள் கொண்டு வர முடியாத போலீசார் திணறினர். இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். போலீசாரின் தூப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியானார்கள்.
 


1. தமிழரசன், (35) 
S/o பொன்னுநாயகம் 
குறுக்குச்சாலை 

2. சண்முகம்( 25) ஆசிரியர் 
காலனிதூத்துக்குடி

3.கிளாஸ்டன் (40)
S/o கோவில்பிச்சை
லூர்தம்மாள்புரம்
தூத்துக்குடி

4. கந்தையா (55)
S/o குப்புசாமி 
சிலோன்காலனி 
தூத்துக்குடி 

5.மணிராஜ் (34)
S/o சௌந்திரபாண்டி 
தாமோதர் நகர் 
தூத்துக்குடி

6.ஸ்னோலின் (17)

7. அந்தோணி செல்வராஜ் (35)

8.ஜெயராமன் (62) 
உசிலம்பட்டி

9. 46 வயதுள்ள பெண்
திரேஸ்புரம் 
தூத்துக்குடி

சார்ந்த செய்திகள்