Published on 14/05/2020 | Edited on 14/05/2020
கரோனா பரவல் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு வரும் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலால் 78,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 2,500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில் ஜூன் 30 வரை ரயில் பயணத்திற்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்த ரயில் டிக்கெட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேநேரம் சிறப்பு ஷ்ராமிக் ரயில்கள் தொடர்ந்து இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு முழு டிக்கெட் கட்டணமும் பயணிகளுக்குத் திரும்ப அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.